மத வழிபாட்டை உறுதி செய் -வெடுக்கு நாரி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) மாலை திருகோணமலையில் போராட்டமொன்று இடம்பெற்றது.
போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்களின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்கு நாரி மலையில் கடந்த சிவன் ராத்திரி தினத்தன்று வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது உண்மையிலேயே கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.
ஆனால் அதற்கு ஒரு தடை போடும் விஷயமாகவே நாங்கள் இதனை கருதுகின்றோம் எனவும் போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தனர்.
அரசாங்கம் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மத வழிபாட்டை உறுதி செய் - திருகோணமலையில் போராட்டம் . மத வழிபாட்டை உறுதி செய் -வெடுக்கு நாரி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) மாலை திருகோணமலையில் போராட்டமொன்று இடம்பெற்றது.போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்களின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்கு நாரி மலையில் கடந்த சிவன் ராத்திரி தினத்தன்று வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது உண்மையிலேயே கவலைக்குரிய ஒரு விடயமாகும். ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அதற்கு ஒரு தடை போடும் விஷயமாகவே நாங்கள் இதனை கருதுகின்றோம் எனவும் போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தனர்.அரசாங்கம் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.