• Nov 25 2024

சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டம் - நீதிமன்றம் விசேட உத்தரவு..!samugammedia

Tharun / Jan 24th 2024, 1:12 pm
image

சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற வீதி வரை இன்று (24) நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து பாராளுமன்ற வீதியை மறித்து, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து மற்றும் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாக வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

இதன்படி, எந்தவொரு வீதியையும் மறித்து, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடாமல், பொதுமக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையிலும், அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மற்றும் எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும் குறித்த போராட்டத்தை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவ்வாறு பொறுப்பை ஏற்க முடியாவிட்டால், குறித்த போராட்டத்தை எதிர் மனுதாரர்கள் உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால், அமைதியை நிலைநாட்ட பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டம் - நீதிமன்றம் விசேட உத்தரவு.samugammedia சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற வீதி வரை இன்று (24) நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து பாராளுமன்ற வீதியை மறித்து, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து மற்றும் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாக வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  இதன்படி, எந்தவொரு வீதியையும் மறித்து, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடாமல், பொதுமக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையிலும், அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மற்றும் எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும் குறித்த போராட்டத்தை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.அவ்வாறு பொறுப்பை ஏற்க முடியாவிட்டால், குறித்த போராட்டத்தை எதிர் மனுதாரர்கள் உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை மீறினால், அமைதியை நிலைநாட்ட பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement