பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் இன்றைய தினம் கலந்துரையாடினார்கள்.
குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார்.
இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது, இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
பெரியநீலாவணையில் மதுபானசாலைக்குஎதிராக வெடித்த போராட்டம்; நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை; எம்.ஏ.சுமந்திரன் உறுதி பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் இன்றைய தினம் கலந்துரையாடினார்கள்.குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார்.இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது, இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.