• May 18 2024

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன் இன்று ஆர்ப்பாட்டம்..! ஆசிரியர்கள் அதிரடி தீர்மானம் samugammedia

Chithra / Oct 27th 2023, 8:40 am
image

Advertisement

 

ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை முடிந்ததும், பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (27) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாவது பாடசாலை தவணை நவம்பர் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன் இன்று ஆர்ப்பாட்டம். ஆசிரியர்கள் அதிரடி தீர்மானம் samugammedia  ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.அதன்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை முடிந்ததும், பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (27) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மூன்றாவது பாடசாலை தவணை நவம்பர் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement