திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர பணவசதி அற்ற மாணவர்களுக்குமாக மொத்தம் 64 மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று(21), மூன்று மாதத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் இதற்கான காசோலைகளை திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.
இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், கல்வியின் முதன்மை பற்றியும் எதிர்காலத்தில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய சமூகப் பணிகள் பற்றியும் மாணவர்களுக்கு இதன் போது எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு. திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர பணவசதி அற்ற மாணவர்களுக்குமாக மொத்தம் 64 மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று(21), மூன்று மாதத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் இதற்கான காசோலைகளை திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர். இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், கல்வியின் முதன்மை பற்றியும் எதிர்காலத்தில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய சமூகப் பணிகள் பற்றியும் மாணவர்களுக்கு இதன் போது எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.