Wednesday, May 18, 2022

பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பேரணிக்கு தடை!

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நாளையதினம்(15) காலை பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நடைபவனிக்கு எதிராக அக்கறைப்பற்று பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றத்திற்கு செய்த அறிக்கையின் பிரகாரம் அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றம் குறித்த நடைபவணி மற்றும் வாகன அணிவகுப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் காரணமாகவும் ஜனாதிபதியால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளமையாலும் சட்டவிரோத கூட்டம் கூடுவது மற்றும் எதிர்ப்பு போராட்டம் மற்றும் வாகன பேரணி நடைபெறுவதை தவிர்க்குமாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை