நெடும் பகையை போக்கும் புளிநெல்லி! முடிந்தால் செய்துபாருங்கள்!

94

புளிநெல்லி எல்லா இடங்களிலும் விளையும் தன்மைமிக்கதுடன் நெல்லிகளில் ஒரு இளவரசனைப் போல விளங்குகின்றது.

ஏனெனில், மற்ற நெல்லிகள் எல்லாம், சிறிய எலுமிச்சை அளவில் இருக்கும், இந்த புளிநெல்லி மட்டும், அதில் உருவில் சிறிய அளவில் காணப்படும். சிறுமரமாக வளரும் இயல்புடைய புளிநெல்லி, பெரிய அளவிலான கிளைகளையும் கிளைகளில் கொத்துக்கொத்தாக காய்க்கும் மஞ்சள் வண்ண நெல்லிக்கனிகளைக் கொண்டதுமாகும்.

“நெல்லியால் நெடும்பகை போகும்” என்பது, மூத்தோர் வாக்கு, இதில் நெடும்பகை என்பது உடல் வியாதி எனப்பொருள்படும்.

சித்த மருத்துவத்தில் பங்கு

கருநெல்லியை நாம் முன்னோர் மூலமாக, சித்த இலக்கியங்கள் வாயிலாக மட்டும் கேட்டு வந்திருக்கிறோம், சித்த மருத்துவத்தில், உடலுக்கு நலம் தரும் மூலிகைகள் கருநிறத்தில் இருந்தால், அதுவே, காயகற்பமாக விளங்கி, மனிதரின் பிணி, மூப்பைத் தடுக்கும் என்பதால், அவற்றுக்கு மதிப்பு மிக அதிகம், ஆயினும், கிடைப்பது அரிது.

பெருநெல்லி எனும் நெல்லியே தற்காலத்தில் எங்கும் கிடைப்பதும், எல்லோரும் பயன்படுத்துவதுமாகும். சித்த மருத்துவத்தில் இருந்து, வீடுகளில் பயன்படுத்தப்படுவதும், இதுவே.

மூன்றாவதுதான், அருநெல்லி எனப்படும் இந்த புளிநெல்லி, சித்த மருத்துவத்தில், அதிகம் பயன்படுத்தப்படாத இந்த நெல்லி, வீட்டு உபயோகங்களில் அதிகம் பயன்படுகிறது.

பசியைத் தூண்டும்

நாவின் சுவையின்மையை சித்த மருத்துவம், “அரோசகம்” என்கிறது, இந்த அரோசகம் பாதிப்பு தீர, புளிநெல்லிகளை ஊறுகாய் செய்துவைத்துக் கொண்டு, தினமும் உணவில் சேர்த்துவர, சுவையின்மை விலகி, உணவில் நாட்டம் வரும்.

இந்த அருநெல்லி ஊறுகாய், கருவுற்ற மகளிருக்கு, ஆரம்ப மாதங்களில் ஏற்படும் வாந்தி, வயிறு குமட்டுதல் போன்ற பாதிப்புகள் நீங்க உதவும். சாதாரணமாக அருநெல்லியுடன் உப்பிட்டு சாப்பிட்டு வந்தாலும், பெண்களின் வாந்தி பாதிப்புகள் விலகும்.