• Jan 16 2025

மீண்டும் புதுப்பொலிவுடன் சுற்றுலாத்தளமாக மிளிரும் புங்குடுதீவு

Chithra / Jan 7th 2025, 3:40 pm
image

 

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முன்னைய நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒன்றிய பணத்துடன், முன்னைய நிர்வாகசபை உறுப்பினர்கள் சிலரும் தம்மால் முடிந்த சிறிய நிதிப் பங்களிப்பை வழங்கி புங்குடுதீவில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக கடந்த காலங்களில் சுவிஸ் ஒன்றியத்தால் நிர்மாணிக்கப்பட்ட மயானங்களான மணற்காடு, வல்லன், ஊரதீவு மயானங்களை துப்பரவாக்கி புனரமைக்கப்பட்டதுடன், அதேபோல் சுவிஸ் ஒன்றியத்தால் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவின் அடையாளங்களில் ஒன்றான பெருமைமிகு பெருக்குமர பிரதேசமும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதிய நடைபாதை, கடற்கரைக்கான நடைபாதை அமைத்து புனரமைத்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேற்படி செயற்பாடுகளை சுவிஸில் வதியும் சொக்கலிங்கம் ரஞ்சன் வேண்டுகோளுக்கு இணங்க, கனடாவில் வசிப்பவரும், புங்குடுதீவின் ஊரதீவை பூர்வீமாகக் கொண்டவரும், TRM ஸ்தாபனத்தின் நிறுவனரும், கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவருமான திரு.தீபன் குணபாலசிங்கம் முழுமனதோடு செயல்படுத்தி உள்ளனர்.

சுவிஸ் ஒன்றியம் சார்பில் முன்வைத்த எமது வேண்டுகோளை ஏற்று சகல விடயங்களையும் முன்னின்று செயலாற்றியதுடன், தனது செலவிலேயே பெருக்குமர சுற்றாடலில் உள்ள தங்குமிட வட்டக்கொட்டகை பழுதாகியுள்ள நிலையில் புதிதாக அமைத்து கொடுத்து உள்ளார். 

இவற்றை சுவிஸ் ஒன்றிய இலங்கை செயற்பாட்டாளரான முன்னாள் அதிபர் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் மேற்பார்வையிட்டு இருந்தார்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றியத்தின் செயற்பாடுகளை பார்வையிடும் நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் பெருக்குமர சுற்றாடலில் நடைபெற்றது. 

சுவிஸ் ஒன்றிய இலங்கை செயற்பாட்டாளரான முன்னாள் அதிபர் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம்  தலைமையில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடக்கு மாகாண பிரதம செயலாளருமான இலட்சுமணன் இளங்கோவன்  பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள திரு.கணபதிப்பிள்ளை இலட்சுமணன், இளங்கோவன் கிருபா, சதாசிவ சிவகுமாரக்குருக்கள் (பிரதமகுரு புங்குடுதீவு இருபிட்டி கொம்மாபிட்டிப் பிள்ளையார் கோயில்), பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் (முன்னாள் தலைவர் புவியியல்துறை யாழ். பல்கலைக் கழகம்), ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு), கதிரவேலு பிரசாந்தன் (பொறுப்பதிகாரி புங்குடுதீவு உப அலுவலகம் பிரதேச சபை வேலணை), சின்னாம்பி மாஸ்ரர் எனும் திரு.தம்பிராசா சங்கரராஜா (பிரான்ஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய தலைவர், மற்றும் ஓய்வுநிலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் புங்குடுதீவு),  நாவலன் கருணாகரன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), nகணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்),  கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினரான  TRM தீபன், சதாசிவம் வைகுந்தராசா (சமூகசேவையாளர், அனைத்துலக இணைப்பாளர் புங்குடுதீவு இருபிட்டி சனசமூக நிலையம்), புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர் பிள்ளைநாயகம் சதீஷ், நாகராசா அழகேசன் (தலைவர் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் ஒன்றியம்), ஒளிப்படக் கலைஞர் ஏ.கே.கமல் எனும் குருமூர்த்தி கமலதாசன், இறுப்பிட்டி கல்லடி அம்மன் ஆலய தர்மகர்த்தா திருமதி.தேவி ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர். அப்பிரதேசத்தில் மரநடுகையும் நடத்தப்பட்டது.

பிரதம விருந்தினர் தம்பதிகள் கௌரவிக்கப்படத்துடன், சுவிஸ் ஒன்றிய சேவையைப் பாராட்டி விருந்தினர்களினால் உரையாற்றப்பட்டது. 

இதேவேளை சுவிஸ் ஒன்றிய முன்னைய நிர்வாகசபை பொறுப்பாளர்களின் பங்களிப்புடன் ஒன்றியத்துடன் மிகுதியாக இருந்த நிதியும் இணைத்து இவற்றை செயல்படுத்திய போதிலும், புங்குடுதீவின் பெருமைமிகு பெருக்குமர கடற்கரையோரமாக ஏற்கனவே சுவிஸ் ஒன்றியம் அமைத்திருந்த வட்டக் கொட்டகையை தனது சொந்த செலவிலேயே புதிதாக புனரமைத்துத் தந்த, கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவருமான  TRM தீபன் அவரது குடும்பத்துக்கும் மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டதுடன், அவரது ஊர் சார்ந்த சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை மேற்படி பெருக்குமர விளம்பர செயலாற்றலுக்கு தமது பெற்றோர்களான புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் பிறந்து ஆறாம் வட்டாரத்தில் வாழ்ந்தவர்களான அமரர்கள் பாலசிங்கம் நாகம்மா அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகளில் ஒருவரான சுவிஸ் வாழ் திருமதி. தயாபரன் வசந்தி குடும்பம் நிதிப் பங்களிப்பு வழங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மீண்டும் புதுப்பொலிவுடன் சுற்றுலாத்தளமாக மிளிரும் புங்குடுதீவு  சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முன்னைய நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒன்றிய பணத்துடன், முன்னைய நிர்வாகசபை உறுப்பினர்கள் சிலரும் தம்மால் முடிந்த சிறிய நிதிப் பங்களிப்பை வழங்கி புங்குடுதீவில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக கடந்த காலங்களில் சுவிஸ் ஒன்றியத்தால் நிர்மாணிக்கப்பட்ட மயானங்களான மணற்காடு, வல்லன், ஊரதீவு மயானங்களை துப்பரவாக்கி புனரமைக்கப்பட்டதுடன், அதேபோல் சுவிஸ் ஒன்றியத்தால் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவின் அடையாளங்களில் ஒன்றான பெருமைமிகு பெருக்குமர பிரதேசமும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதிய நடைபாதை, கடற்கரைக்கான நடைபாதை அமைத்து புனரமைத்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மேற்படி செயற்பாடுகளை சுவிஸில் வதியும் சொக்கலிங்கம் ரஞ்சன் வேண்டுகோளுக்கு இணங்க, கனடாவில் வசிப்பவரும், புங்குடுதீவின் ஊரதீவை பூர்வீமாகக் கொண்டவரும், TRM ஸ்தாபனத்தின் நிறுவனரும், கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவருமான திரு.தீபன் குணபாலசிங்கம் முழுமனதோடு செயல்படுத்தி உள்ளனர்.சுவிஸ் ஒன்றியம் சார்பில் முன்வைத்த எமது வேண்டுகோளை ஏற்று சகல விடயங்களையும் முன்னின்று செயலாற்றியதுடன், தனது செலவிலேயே பெருக்குமர சுற்றாடலில் உள்ள தங்குமிட வட்டக்கொட்டகை பழுதாகியுள்ள நிலையில் புதிதாக அமைத்து கொடுத்து உள்ளார். இவற்றை சுவிஸ் ஒன்றிய இலங்கை செயற்பாட்டாளரான முன்னாள் அதிபர் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் மேற்பார்வையிட்டு இருந்தார்.இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றியத்தின் செயற்பாடுகளை பார்வையிடும் நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் பெருக்குமர சுற்றாடலில் நடைபெற்றது. சுவிஸ் ஒன்றிய இலங்கை செயற்பாட்டாளரான முன்னாள் அதிபர் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம்  தலைமையில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடக்கு மாகாண பிரதம செயலாளருமான இலட்சுமணன் இளங்கோவன்  பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள திரு.கணபதிப்பிள்ளை இலட்சுமணன், இளங்கோவன் கிருபா, சதாசிவ சிவகுமாரக்குருக்கள் (பிரதமகுரு புங்குடுதீவு இருபிட்டி கொம்மாபிட்டிப் பிள்ளையார் கோயில்), பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் (முன்னாள் தலைவர் புவியியல்துறை யாழ். பல்கலைக் கழகம்), ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு), கதிரவேலு பிரசாந்தன் (பொறுப்பதிகாரி புங்குடுதீவு உப அலுவலகம் பிரதேச சபை வேலணை), சின்னாம்பி மாஸ்ரர் எனும் திரு.தம்பிராசா சங்கரராஜா (பிரான்ஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய தலைவர், மற்றும் ஓய்வுநிலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் புங்குடுதீவு),  நாவலன் கருணாகரன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), nகணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்),  கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினரான  TRM தீபன், சதாசிவம் வைகுந்தராசா (சமூகசேவையாளர், அனைத்துலக இணைப்பாளர் புங்குடுதீவு இருபிட்டி சனசமூக நிலையம்), புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர் பிள்ளைநாயகம் சதீஷ், நாகராசா அழகேசன் (தலைவர் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் ஒன்றியம்), ஒளிப்படக் கலைஞர் ஏ.கே.கமல் எனும் குருமூர்த்தி கமலதாசன், இறுப்பிட்டி கல்லடி அம்மன் ஆலய தர்மகர்த்தா திருமதி.தேவி ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர். அப்பிரதேசத்தில் மரநடுகையும் நடத்தப்பட்டது.பிரதம விருந்தினர் தம்பதிகள் கௌரவிக்கப்படத்துடன், சுவிஸ் ஒன்றிய சேவையைப் பாராட்டி விருந்தினர்களினால் உரையாற்றப்பட்டது. இதேவேளை சுவிஸ் ஒன்றிய முன்னைய நிர்வாகசபை பொறுப்பாளர்களின் பங்களிப்புடன் ஒன்றியத்துடன் மிகுதியாக இருந்த நிதியும் இணைத்து இவற்றை செயல்படுத்திய போதிலும், புங்குடுதீவின் பெருமைமிகு பெருக்குமர கடற்கரையோரமாக ஏற்கனவே சுவிஸ் ஒன்றியம் அமைத்திருந்த வட்டக் கொட்டகையை தனது சொந்த செலவிலேயே புதிதாக புனரமைத்துத் தந்த, கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவருமான  TRM தீபன் அவரது குடும்பத்துக்கும் மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டதுடன், அவரது ஊர் சார்ந்த சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.இதேவேளை மேற்படி பெருக்குமர விளம்பர செயலாற்றலுக்கு தமது பெற்றோர்களான புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் பிறந்து ஆறாம் வட்டாரத்தில் வாழ்ந்தவர்களான அமரர்கள் பாலசிங்கம் நாகம்மா அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகளில் ஒருவரான சுவிஸ் வாழ் திருமதி. தயாபரன் வசந்தி குடும்பம் நிதிப் பங்களிப்பு வழங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement