• Sep 21 2024

ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு - ஊழியர் தேர்வில் முறைகேடுகள்?samugammedia

Tamil nila / Jul 14th 2023, 8:33 pm
image

Advertisement

ஏப்ரல் 26ஆம் திகதி மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வாணையம் நடத்திய வருவாய்த் துறை தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போபால், இந்தூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலையற்ற இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முறைகேடுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில், ‘பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இருந்து மற்றொரு ஊழல் செய்தி வருகிறது. பாஜக அரசு ஏன் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளுகிறது?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும்  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘முதலில் மத்திய பிரதேசத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக திருடியது. இப்போது அது மாணவர்களிடமிருந்து அவர்களின் உரிமைகளையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் திருடுகிறது,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு - ஊழியர் தேர்வில் முறைகேடுகள்samugammedia ஏப்ரல் 26ஆம் திகதி மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வாணையம் நடத்திய வருவாய்த் துறை தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போபால், இந்தூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலையற்ற இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த முறைகேடுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில், ‘பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இருந்து மற்றொரு ஊழல் செய்தி வருகிறது. பாஜக அரசு ஏன் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளுகிறது’ என கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும்  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘முதலில் மத்திய பிரதேசத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக திருடியது. இப்போது அது மாணவர்களிடமிருந்து அவர்களின் உரிமைகளையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் திருடுகிறது,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement