• Oct 06 2024

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 12:38 pm
image

Advertisement

மோடி சாதிப்பெயர் தொடர்பில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றிய விவகாரத்தில் சூரத் மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல்காந்தி, தனது தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வழக்கையே தள்ளுபடிசெய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி உத்தரவு SamugamMedia மோடி சாதிப்பெயர் தொடர்பில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றிய விவகாரத்தில் சூரத் மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளித்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல்காந்தி, தனது தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், வழக்கையே தள்ளுபடிசெய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement