• May 18 2024

ராஜபக்ஷக்களின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது - சனல் 4 இடம் நட்டஈடு கோரும் மொட்டு கட்சியினர்! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 8:11 am
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, குறித்த நிறுவனத்திடம் நட்டஈடு கோருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி ஆதாரமற்றவை என சேனல் 4 நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தமது கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ள அவதூறுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து வெளியிட்டுள்ளது.

புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் பிரதான சூத்திரதாரி இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என சேனல் 4 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சியின் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், இவ்வாறான செயல்களை மேற்கொள்வதால் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராஜபக்ஷக்களின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது - சனல் 4 இடம் நட்டஈடு கோரும் மொட்டு கட்சியினர் samugammedia உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, குறித்த நிறுவனத்திடம் நட்டஈடு கோருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த காணொளி ஆதாரமற்றவை என சேனல் 4 நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தமது கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ள அவதூறுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து வெளியிட்டுள்ளது.புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் பிரதான சூத்திரதாரி இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என சேனல் 4 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, கட்சியின் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், இவ்வாறான செயல்களை மேற்கொள்வதால் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement