• May 19 2024

அரசியல் தீர்வை வென்றெடுக்க தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள்க - தினேஷ் அறைகூவல்!

Tamil nila / Dec 29th 2022, 9:51 pm
image

Advertisement

"ஆட்சியில் இருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கவில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கியே தீரும். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும்."


- இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள் சக்தியின் - கொழும்பு மாவட்டத்துக்கான நிர்வாகக் குழு உறுப்பினரும் 'கோட்டா கோ ஹோம்' போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமான தினேஷ் குமார் கார்மேகம் தெரிவித்தார்.


"மக்களை அணிதிரட்டி ராஜபக்சக்களை ஆட்சிப்பீடத்திலிருந்து விரட்டியடித்தது தேசிய மக்கள் சக்திதான் என்பதை எவரும் மறக்கமாட்டார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,


"ராஜபக்சக்கள் கொடூரர்கள். ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஒரேயொரு அணி தேசிய மக்கள் சக்திதான். இதை உணர்ந்துதான் உலக நாடுகளின் தூதுவர்களும், பெரும்பான்மை இன மக்களும் தேசிய மக்கள் சக்தியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், தமிழ் மக்களும் தேசிய ரீதியில் சிந்தித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.


கடந்த போர்க்காலத்தில் காணாமல்போனோருக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழ் மக்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது.


தலைநகரத்தின் - கொழும்பு வாழ் தமிழ் மக்களின் குரலாக நான் என்றும் ஒலித்துக் கொண்டிருப்பேன். நாட்டை விற்று மீண்டும் மீண்டும் அழித்துக் கொண்டிருக்கும் கயவர்களுக்குப் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்குக் கொழும்பு மாநகரத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.


வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளைத் தவிர மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மீதோ அல்லது கொழும்பு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் மீதோ இனிமேலும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. ஏனெனில், இவர்கள்தான் 74 வருடங்களாக ஆட்சியில் இருந்த திருட்டுக் கும்பலை வளர்த்துவிட்டவர்கள்" - என்றார்.

அரசியல் தீர்வை வென்றெடுக்க தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள்க - தினேஷ் அறைகூவல் "ஆட்சியில் இருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கவில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கியே தீரும். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும்."- இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள் சக்தியின் - கொழும்பு மாவட்டத்துக்கான நிர்வாகக் குழு உறுப்பினரும் 'கோட்டா கோ ஹோம்' போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமான தினேஷ் குமார் கார்மேகம் தெரிவித்தார்."மக்களை அணிதிரட்டி ராஜபக்சக்களை ஆட்சிப்பீடத்திலிருந்து விரட்டியடித்தது தேசிய மக்கள் சக்திதான் என்பதை எவரும் மறக்கமாட்டார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"ராஜபக்சக்கள் கொடூரர்கள். ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஒரேயொரு அணி தேசிய மக்கள் சக்திதான். இதை உணர்ந்துதான் உலக நாடுகளின் தூதுவர்களும், பெரும்பான்மை இன மக்களும் தேசிய மக்கள் சக்தியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், தமிழ் மக்களும் தேசிய ரீதியில் சிந்தித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.கடந்த போர்க்காலத்தில் காணாமல்போனோருக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழ் மக்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது.தலைநகரத்தின் - கொழும்பு வாழ் தமிழ் மக்களின் குரலாக நான் என்றும் ஒலித்துக் கொண்டிருப்பேன். நாட்டை விற்று மீண்டும் மீண்டும் அழித்துக் கொண்டிருக்கும் கயவர்களுக்குப் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்குக் கொழும்பு மாநகரத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளைத் தவிர மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மீதோ அல்லது கொழும்பு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் மீதோ இனிமேலும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. ஏனெனில், இவர்கள்தான் 74 வருடங்களாக ஆட்சியில் இருந்த திருட்டுக் கும்பலை வளர்த்துவிட்டவர்கள்" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement