• Sep 17 2024

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்...!samugammedia

Sharmi / Oct 16th 2023, 7:37 am
image

Advertisement

5 விசைப்படகையும், 27 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 18ம் தேதி பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப்படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்தது. அதை போல தனுஷ்கோடி -  தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது.

இந்த நிலையில் ஐந்து விசைப்படகையும், 27 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18ஆம் தேதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் மீனவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடபோவதாகும் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.samugammedia 5 விசைப்படகையும், 27 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 18ம் தேதி பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப்படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்தது. அதை போல தனுஷ்கோடி -  தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது.இந்த நிலையில் ஐந்து விசைப்படகையும், 27 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18ஆம் தேதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் மீனவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.மேலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடபோவதாகும் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement