• May 02 2024

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு! samugammedia

Tamil nila / Sep 17th 2023, 9:07 am
image

Advertisement

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட மீனவர்கள் 8 பேரை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வர மீனவர்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

800 மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மீனவர்களுக்காக டோக்கன்களை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினால் கடந்த 13 ஆம் திகதி இரவு 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்கள் 8 பேர் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட மீனவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி கடகுகளும் இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கமைய  இலங்கை கடற்படையினால் 2023 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 17 இழுவைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 110 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு samugammedia இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட மீனவர்கள் 8 பேரை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வர மீனவர்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.800 மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மீனவர்களுக்காக டோக்கன்களை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினால் கடந்த 13 ஆம் திகதி இரவு 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்கள் 8 பேர் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட மீனவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி கடகுகளும் இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதற்கமைய  இலங்கை கடற்படையினால் 2023 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 17 இழுவைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 110 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement