• May 19 2024

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..! samugammedia

Chithra / Oct 18th 2023, 1:56 pm
image

Advertisement

 

கடந்த 14ஆம் திகதி இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களையும், படகுகளையும், விடுதலை  செய்ய வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் தபால் தந்தி  அலுவலகம் முன்பு ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீன்பிடி சார்பு தொழிலாளர் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கச்சத்தீவை  மீட்டு கொடு, கச்சத்தீவு பகுதியில் இழந்த மீன்பிடி உரிமையை மீட்டெடுக்கவும், இலங்கை கடற்படையால்  தாக்குதலுக்கு உண்டான படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால்  பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட விசைப் படகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி நிவாரண வழங்க வேண்டும் , தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில்  ஈடுபடும் இலங்கை கடற்படையினரை யும்,இலங்கை அரசுக்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், இன்று நடைபெற இருந்த  பாம்பன் சாலை மறியல் போராட்டத்தை   அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

அதேபோல் வரும் 27ஆம் திக மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுதலை  செய்து தருவதாக  அரசு சார்பில் அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

அதிகாரிகள் சொன்னவாறு விடுவிக்க படாவிட்டால் நவம்பர் 1ஆம் திகதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்று திரட்டி மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தொடர்ச்சியான பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

 


இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம். samugammedia  கடந்த 14ஆம் திகதி இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களையும், படகுகளையும், விடுதலை  செய்ய வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் தபால் தந்தி  அலுவலகம் முன்பு ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீன்பிடி சார்பு தொழிலாளர் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் கச்சத்தீவை  மீட்டு கொடு, கச்சத்தீவு பகுதியில் இழந்த மீன்பிடி உரிமையை மீட்டெடுக்கவும், இலங்கை கடற்படையால்  தாக்குதலுக்கு உண்டான படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால்  பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட விசைப் படகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி நிவாரண வழங்க வேண்டும் , தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில்  ஈடுபடும் இலங்கை கடற்படையினரை யும்,இலங்கை அரசுக்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.போராட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், இன்று நடைபெற இருந்த  பாம்பன் சாலை மறியல் போராட்டத்தை   அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.அதேபோல் வரும் 27ஆம் திக மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுதலை  செய்து தருவதாக  அரசு சார்பில் அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.அதிகாரிகள் சொன்னவாறு விடுவிக்க படாவிட்டால் நவம்பர் 1ஆம் திகதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்று திரட்டி மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தொடர்ச்சியான பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement