• Apr 28 2024

பீத்தி திரியும் ரணில் விக்கிரமசிங்க..! பெல்ட்டியடிக்கும் வசந்த முதலிகே..!samugammedia

Sharmi / Mar 27th 2023, 3:44 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்க ,மஹிந்த, கோட்டா என அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தமது பதவியினை தக்கவைத்து கொள்ள வடபகுதியில் விகாரைகளை அமைப்பதாகவும் அவர்களுடன் இணைந்து கடற்படை, விமானப்படை மற்றும் பொலிசார் போன்றோர் சிங்கள மயமாக்கலில் ஈடுபடுவதாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின்  உப தலைவர் தர்சன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர்  ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க , கூக்குரலிடும் ஆளும்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச  மற்றும் அனுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, கோட்டா  போன்றோர் தமது பதவியினை தக்க வைத்து கொள்வதற்கு ஆமாத்தூரூ சொல்வதை இங்கு நிகழ்த்துவது போல் வடக்கில் விகாரைகள் அமைக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவிற்கு எதற்க்காக அமத்துருக்கள் வருகை தந்தனர் எனவும் கேள்வி எழுப்பியதுடன் அங்கு சென்ற மக்களை கடற்படையினர் முறைப்படி உபசரிக்காது அவர்களது கால்களில் விழுந்து வணக்கம் செலுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டார்.

வசந்த முதலிகேவிடம் மின்னியல் முறை மூலம் 10 கோரிக்கைகளினை நாம் முன் வைத்த நிலையில்  ஒரு ஊடக சந்திப்பின் போது அவற்றினை அவர் முழுவதுமாக மறுத்துள்ளார். ஆகையால், பெல்டியடி அரசியல்வாதி என்றே அவரையும் அடையாளப்படுத்துகின்றோம்.  

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் 50  பேருக்கு மத்தியில் பிரசாரத்தினை நடத்தியுள்ளார். அவர் எமது கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டிருந்தால் நாமும் அவருடன் இணைந்து செயலாற்றி இருப்போம்  எனவும் தெரிவித்தார்.

உங்கள் கண் முன் சைவர்களுடைய ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு விகாரைகளாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றை எப்பொழுது தட்டி கேட்க போக்கின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம்  பணங்களை அள்ளி கொடுத்துள்ளதாக அவர் ஊடகங்களிடம் பீத்தி கொண்டு திரிகின்றார்.

நீதிமன்றத்தில் பூசகர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பொழுதும் பொலிசார் அனுமதிக்கவில்லை எனவும் பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் வெடுக்குநாறியில் பூசைகள் செய்யப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக ஒன்றியத்தின்  10 வது பூசை தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஒரு பௌத்த விகாரை இடிக்கப்பட்டிருந்தால் DIG, OIC என அனைவரும் தமது பதவிகளை தக்கவைத்து கொள்ள அங்கு விரைந்திருப்பார்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கடற்படை,பொலிஸ் மற்றும் விமானப்படை என அனைத்தும் ஒன்றிணைந்து சிங்கள மயமாக்கலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் நாட்டிற்கு நிதியினை வழங்கும் போது நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்து வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பீத்தி திரியும் ரணில் விக்கிரமசிங்க. பெல்ட்டியடிக்கும் வசந்த முதலிகே.samugammedia ரணில் விக்கிரமசிங்க ,மஹிந்த, கோட்டா என அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தமது பதவியினை தக்கவைத்து கொள்ள வடபகுதியில் விகாரைகளை அமைப்பதாகவும் அவர்களுடன் இணைந்து கடற்படை, விமானப்படை மற்றும் பொலிசார் போன்றோர் சிங்கள மயமாக்கலில் ஈடுபடுவதாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின்  உப தலைவர் தர்சன் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர்  ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க , கூக்குரலிடும் ஆளும்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச  மற்றும் அனுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, கோட்டா  போன்றோர் தமது பதவியினை தக்க வைத்து கொள்வதற்கு ஆமாத்தூரூ சொல்வதை இங்கு நிகழ்த்துவது போல் வடக்கில் விகாரைகள் அமைக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவிற்கு எதற்க்காக அமத்துருக்கள் வருகை தந்தனர் எனவும் கேள்வி எழுப்பியதுடன் அங்கு சென்ற மக்களை கடற்படையினர் முறைப்படி உபசரிக்காது அவர்களது கால்களில் விழுந்து வணக்கம் செலுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டார். வசந்த முதலிகேவிடம் மின்னியல் முறை மூலம் 10 கோரிக்கைகளினை நாம் முன் வைத்த நிலையில்  ஒரு ஊடக சந்திப்பின் போது அவற்றினை அவர் முழுவதுமாக மறுத்துள்ளார். ஆகையால், பெல்டியடி அரசியல்வாதி என்றே அவரையும் அடையாளப்படுத்துகின்றோம்.  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் 50  பேருக்கு மத்தியில் பிரசாரத்தினை நடத்தியுள்ளார். அவர் எமது கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டிருந்தால் நாமும் அவருடன் இணைந்து செயலாற்றி இருப்போம்  எனவும் தெரிவித்தார். உங்கள் கண் முன் சைவர்களுடைய ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு விகாரைகளாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றை எப்பொழுது தட்டி கேட்க போக்கின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம்  பணங்களை அள்ளி கொடுத்துள்ளதாக அவர் ஊடகங்களிடம் பீத்தி கொண்டு திரிகின்றார். நீதிமன்றத்தில் பூசகர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பொழுதும் பொலிசார் அனுமதிக்கவில்லை எனவும் பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் வெடுக்குநாறியில் பூசைகள் செய்யப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக ஒன்றியத்தின்  10 வது பூசை தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே வேளை ஒரு பௌத்த விகாரை இடிக்கப்பட்டிருந்தால் DIG, OIC என அனைவரும் தமது பதவிகளை தக்கவைத்து கொள்ள அங்கு விரைந்திருப்பார்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். கடற்படை,பொலிஸ் மற்றும் விமானப்படை என அனைத்தும் ஒன்றிணைந்து சிங்கள மயமாக்கலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் நாட்டிற்கு நிதியினை வழங்கும் போது நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்து வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement