• May 19 2024

இராவணன் சிங்களவன்..! தமிழ் மன்னன் அல்ல...! சரத் வீரசேகர கண்டுபிடிப்பு..!samugammedia

Sharmi / Aug 12th 2023, 11:51 am
image

Advertisement

இராவண மன்னன் இயக்கர் குலத்தைச் சேர்ந்த சிங்களவன். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ்ப் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்றபோது இராணவனைத் தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்படவேண்டும் என சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்தஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக் கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப் பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர்த் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியதாக உள்ளன. மன்னராட்சிக் காலத்தில் சிங்களப் பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடு வதை மறுக்கமுடியாது.

மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணனின் கொடியில் சிங்கச் சின் னம் உள்ளது. இந்தியர்கள், இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்களத் தலைவனே எனவும் தெரிவித்தார்.

இராவணன் சிங்களவன். தமிழ் மன்னன் அல்ல. சரத் வீரசேகர கண்டுபிடிப்பு.samugammedia இராவண மன்னன் இயக்கர் குலத்தைச் சேர்ந்த சிங்களவன். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ்ப் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்றபோது இராணவனைத் தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்படவேண்டும் என சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்தஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக் கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப் பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர்த் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியதாக உள்ளன. மன்னராட்சிக் காலத்தில் சிங்களப் பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடு வதை மறுக்கமுடியாது.மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணனின் கொடியில் சிங்கச் சின் னம் உள்ளது. இந்தியர்கள், இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்களத் தலைவனே எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement