• Mar 17 2025

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தயார்: சரத் பொன்சேகா

Sharmi / Mar 17th 2025, 4:07 pm
image

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தான் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது பொலிஸ் துறையில் குறைபாடொன்று உள்ளது என்பதற்கான சான்றாகும். 

குற்றவாளிகள் தலைமறைவாகி இருக்கும் சூழ்நிலை உருவாக்கூடாது. அது சீர்செய்யப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எனக்கு ஏதேனும் பொறுப்பு கையளிக்கப்பட்டால், மக்களுக்காக அதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பொறுப்புகளை வெறுமனே பொறுப்பேற்க முடியாது. உரிய பொறிமுறையுடன், அதிகாரங்களுடன் அது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தயார்: சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தான் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,‘பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது பொலிஸ் துறையில் குறைபாடொன்று உள்ளது என்பதற்கான சான்றாகும். குற்றவாளிகள் தலைமறைவாகி இருக்கும் சூழ்நிலை உருவாக்கூடாது. அது சீர்செய்யப்படும்.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எனக்கு ஏதேனும் பொறுப்பு கையளிக்கப்பட்டால், மக்களுக்காக அதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.பொறுப்புகளை வெறுமனே பொறுப்பேற்க முடியாது. உரிய பொறிமுறையுடன், அதிகாரங்களுடன் அது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement