• May 03 2024

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு உதவத் தயார்! - வடக்கு ஆளுநரின் அறிவிப்பு

Chithra / Dec 4th 2022, 1:27 pm
image

Advertisement


வடமாகாணத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை அணுக முடியும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

அண்மையில் யாழ். சிறைச்சாலையில் உள்ள போதைப்  பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடினேன்.

போதை பொருள் பாவனைகளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு வடக்கு மாகாணத்தில் பல்வேறு வேலை திட்டங்கள் சமுதாய மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து மனநலப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நோயாளியின் பின்னணியைப் புரிந்துகொள்வதற்காக விசேட வைத்தியரைக் கலந்தாலோசிக்க தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்றேன்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  7 நாட்களில் திடீரென இறந்து போனமை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.

அதன் பின்னணியை புரிந்து கொள்ள குடும்பத்தை சந்தித்த நிலையில்  மருத்துவப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் மற்றொரு 17 வயதுடையவர் போதைப்பொருள் பாவனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான எந்தவொரு நபரும் உடனடியாக ஆளுநர் அலுவலகத்தை அணுகலாம் .

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை இனம் கண்டு மறுவாழ்வு அளிப்பதற்கு  பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் தேவைப்படுகிறது.

வட மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களை மனிதாபிமான நீதியில் அணுகுவதற்கு ஆளுநர் செயலகம் தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு உதவத் தயார் - வடக்கு ஆளுநரின் அறிவிப்பு வடமாகாணத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை அணுக முடியும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,போதைப்பொருள் அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.அண்மையில் யாழ். சிறைச்சாலையில் உள்ள போதைப்  பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடினேன்.போதை பொருள் பாவனைகளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு வடக்கு மாகாணத்தில் பல்வேறு வேலை திட்டங்கள் சமுதாய மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து மனநலப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நோயாளியின் பின்னணியைப் புரிந்துகொள்வதற்காக விசேட வைத்தியரைக் கலந்தாலோசிக்க தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்றேன்.அண்மையில் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  7 நாட்களில் திடீரென இறந்து போனமை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.அதன் பின்னணியை புரிந்து கொள்ள குடும்பத்தை சந்தித்த நிலையில்  மருத்துவப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதேபோல் மற்றொரு 17 வயதுடையவர் போதைப்பொருள் பாவனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போதைக்கு அடிமையான எந்தவொரு நபரும் உடனடியாக ஆளுநர் அலுவலகத்தை அணுகலாம் .போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை இனம் கண்டு மறுவாழ்வு அளிப்பதற்கு  பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் தேவைப்படுகிறது.வட மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களை மனிதாபிமான நீதியில் அணுகுவதற்கு ஆளுநர் செயலகம் தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement