மனித உரிமைகள் தினமான இன்றைய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வவுனியா கந்தசுவாமி கோவிலின் முன்னால் ஆரம்பமான குறித்த பேரணி பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இப்பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தில் வீதியில் இறங்கிய காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மனித உரிமைகள் தினமான இன்றைய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த பேரணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை வவுனியா கந்தசுவாமி கோவிலின் முன்னால் ஆரம்பமான குறித்த பேரணி பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.இப்பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.