• Jan 11 2025

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி வேண்டி போராட்டம்

Chithra / Dec 30th 2024, 3:45 pm
image


காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று  யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. 

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.


யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி வேண்டி போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  நீதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று  யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement