தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனிடம் இன்றைய தினம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர் மற்றும் பருத்தித்துறை பிரதேதச செயலாளர் திரு. சி. சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விடுவிக்கப்பட் காணிகளின் விபரங்கள் :
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் : காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லை எனும் கிராம் (15.13 ஏக்கர் காணி) இதன்மூலம் காங்கேசன்துறை மேற்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராம் (20 ஏக்கர் காணி)
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் :
கற்கோவளம் கிராமம் (5.57 ஏக்கர் காணி)
நாளைய தினம் அப் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடி தொடர்பான பரிசீலனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குரிய உரிமையாளர்கள் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனிடம் இன்றைய தினம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர் மற்றும் பருத்தித்துறை பிரதேதச செயலாளர் திரு. சி. சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.விடுவிக்கப்பட் காணிகளின் விபரங்கள் :தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் : காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லை எனும் கிராம் (15.13 ஏக்கர் காணி) இதன்மூலம் காங்கேசன்துறை மேற்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராம் (20 ஏக்கர் காணி)பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் :கற்கோவளம் கிராமம் (5.57 ஏக்கர் காணி) நாளைய தினம் அப் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடி தொடர்பான பரிசீலனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குரிய உரிமையாளர்கள் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.