• May 02 2024

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞையாக அமையும்- கோமகன் தெரிவிப்பு!

Sharmi / Dec 29th 2022, 4:02 pm
image

Advertisement

அரசாங்கத்துடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகள்  விடுதலை தொடர்பில்  அதிக கரிசனை காட்ட வேண்டும் மொத்த கைதிகளின் விடுதலை எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் சாத்தியமாக்க வேண்டும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்தார்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் குற்றமிழைத்தவர்களாக காணப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பளித்த சமூகத்துடன் இணைந்து வாழ வழி காட்ட வேண்டும இதை விடுத்து தமிழ்த் தரப்பும் இதை வைத்து அரசியலை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இன நல்லிணக்கம் எனும்  புதிய விடயத்தை கூறினாலும் 32 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்படும் தருணமே இந்த நல்லிணக்க நிலை சாத்தியமாகும்.

சமாதான பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பிரதிநிதியினர் இவ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை வலியுறுத்தி நல்லிணக்கத்தின் முதற்படியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞையாக அமையும்.

தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா , பாராளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன் மற்றும் சித்தார்த்தன் போன்றோரை சந்தித்த வேளையிலும் கூட  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அதிக கரிசனை காட்டுமாறு வலியுறுத்தினோம்.

தற்போது 19 பேரின் வழக்குகளே நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஏனையவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலே விடுவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகள் துரித கதியில் இடம்பெற்றிருந்தால் அனைத்து கைதிகளும் விடுதலையாகியிருப்பதற்கான சாதக நிலை காணப்படும்.

பொதுவாக ஒரு நாட்டில் போர் நடைபெற்ற பின் அதில் பங்கெடுத்த அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நிலைமை. நல்லிணக்கத்திற்கான பேச்சுக்கள் ஆரம்பமாக முன்னர் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள்  விடுதலை தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதிகம் வலியுறுத்தவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரை சந்தித்த வேளை அவர் கூறினார் என தெரிவித்தார்.



அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞையாக அமையும்- கோமகன் தெரிவிப்பு அரசாங்கத்துடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகள்  விடுதலை தொடர்பில்  அதிக கரிசனை காட்ட வேண்டும் மொத்த கைதிகளின் விடுதலை எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் சாத்தியமாக்க வேண்டும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்தார்.யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் அரசியல் கைதிகள் குற்றமிழைத்தவர்களாக காணப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பளித்த சமூகத்துடன் இணைந்து வாழ வழி காட்ட வேண்டும இதை விடுத்து தமிழ்த் தரப்பும் இதை வைத்து அரசியலை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இன நல்லிணக்கம் எனும்  புதிய விடயத்தை கூறினாலும் 32 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்படும் தருணமே இந்த நல்லிணக்க நிலை சாத்தியமாகும்.சமாதான பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பிரதிநிதியினர் இவ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை வலியுறுத்தி நல்லிணக்கத்தின் முதற்படியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞையாக அமையும்.தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா , பாராளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன் மற்றும் சித்தார்த்தன் போன்றோரை சந்தித்த வேளையிலும் கூட  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அதிக கரிசனை காட்டுமாறு வலியுறுத்தினோம்.தற்போது 19 பேரின் வழக்குகளே நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஏனையவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலே விடுவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகள் துரித கதியில் இடம்பெற்றிருந்தால் அனைத்து கைதிகளும் விடுதலையாகியிருப்பதற்கான சாதக நிலை காணப்படும்.பொதுவாக ஒரு நாட்டில் போர் நடைபெற்ற பின் அதில் பங்கெடுத்த அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நிலைமை. நல்லிணக்கத்திற்கான பேச்சுக்கள் ஆரம்பமாக முன்னர் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள்  விடுதலை தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதிகம் வலியுறுத்தவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரை சந்தித்த வேளை அவர் கூறினார் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement