• May 19 2024

காலம் சென்ற சட்ட முதுமாணி மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவேந்தல் நிகழ்வு..!samugammedia

Sharmi / Jun 20th 2023, 1:46 pm
image

Advertisement

அண்மையில்(25.05.2023) காலம் சென்ற சட்ட முதுமாணி மர்ஹூம்  வை.எல்.எஸ்.ஹமீட்  பற்றிய நினைவேந்தல்  நிகழ்வு கல்முனை  அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது   திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி இரவு 7 மணிவரை நடைபெற்றதுடன்   கிராஅத் ஓதலுடன் ஆரம்பமானது.

மேலும்  மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களிடம் ஆங்கில பாடம் கற்ற பழைய மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன்  வரவேற்புரையை பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியாவும் தலைமை உரையை சட்டத்தரணி ஆரிகா காரியப்பரும் உணர்வு பூர்வமாக மேற்கொண்டனர்.

அத்துடன் மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவுக்கவிதையை பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா  அழுகையுடன் வாசித்தார்.தொடர்ந்து மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவுரையை காத்தான்குடி ஸாவியா மகளீர்  வித்தியாலய பிரதி அதிபர் எம்.வை.எம். யூசுப் இம்ரானும் மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவு பேருரையை  கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.ஏ.பஷீர் ஆகியோரும்  மேற்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்  சட்ட   முதுமாணியுமான மர்ஹூம்  வை.எல்.எஸ்.ஹமீட்டின் வாழ்க்கை வரலாறு பற்றிய நினைவுக் குறிப்பும் வெளியீடு செய்யப்பட்டதுடன் குறித்த  நிகழ்வுகளை ஆசிரியை ஹாபியா றிசாம் தொகுத்து வழங்கினார்.

இது தவிர மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட்டிற்காக யாசீன் ஓதுதலும் துஆப் பிராத்தனையும் மௌலவி அல் ஹாபிழ் எம்.ஐ.எம் றியாஸ் (அல்-தாபி)  நினைவுக் கவிதை காமிலா காரியப்பர் ஏற்புரையை மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட்  அவர்களது குடும்பத்தினர் சார்பில் அவரது சகோதரர்  வைத்தியர் யூசுப்  மேற்கொண்டதுடன் இறுதியாக நன்றியுரை ஸலவாத்துடன் நிகழ்வு சிறப்பாக  நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


காலம் சென்ற சட்ட முதுமாணி மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவேந்தல் நிகழ்வு.samugammedia அண்மையில்(25.05.2023) காலம் சென்ற சட்ட முதுமாணி மர்ஹூம்  வை.எல்.எஸ்.ஹமீட்  பற்றிய நினைவேந்தல்  நிகழ்வு கல்முனை  அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.குறித்த நிகழ்வானது   திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி இரவு 7 மணிவரை நடைபெற்றதுடன்   கிராஅத் ஓதலுடன் ஆரம்பமானது.மேலும்  மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களிடம் ஆங்கில பாடம் கற்ற பழைய மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன்  வரவேற்புரையை பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியாவும் தலைமை உரையை சட்டத்தரணி ஆரிகா காரியப்பரும் உணர்வு பூர்வமாக மேற்கொண்டனர்.அத்துடன் மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவுக்கவிதையை பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா  அழுகையுடன் வாசித்தார்.தொடர்ந்து மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவுரையை காத்தான்குடி ஸாவியா மகளீர்  வித்தியாலய பிரதி அதிபர் எம்.வை.எம். யூசுப் இம்ரானும் மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் பற்றிய நினைவு பேருரையை  கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.ஏ.பஷீர் ஆகியோரும்  மேற்கொண்டனர்.குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்  சட்ட   முதுமாணியுமான மர்ஹூம்  வை.எல்.எஸ்.ஹமீட்டின் வாழ்க்கை வரலாறு பற்றிய நினைவுக் குறிப்பும் வெளியீடு செய்யப்பட்டதுடன் குறித்த  நிகழ்வுகளை ஆசிரியை ஹாபியா றிசாம் தொகுத்து வழங்கினார்.இது தவிர மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட்டிற்காக யாசீன் ஓதுதலும் துஆப் பிராத்தனையும் மௌலவி அல் ஹாபிழ் எம்.ஐ.எம் றியாஸ் (அல்-தாபி)  நினைவுக் கவிதை காமிலா காரியப்பர் ஏற்புரையை மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட்  அவர்களது குடும்பத்தினர் சார்பில் அவரது சகோதரர்  வைத்தியர் யூசுப்  மேற்கொண்டதுடன் இறுதியாக நன்றியுரை ஸலவாத்துடன் நிகழ்வு சிறப்பாக  நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement