• Dec 26 2024

புதுப்பிக்கப்படும் தொடருந்து பயணச்சீட்டு - வெளியான அறிவிப்பு

Chithra / Dec 25th 2024, 2:54 pm
image

 

தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக புதிய தொடருந்து பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய தொடருந்து பயணச்சீட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புதுப்பிக்கப்படும் தொடருந்து பயணச்சீட்டு - வெளியான அறிவிப்பு  தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக புதிய தொடருந்து பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய தொடருந்து பயணச்சீட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement