• Nov 26 2024

மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி- தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் - ரங்கேஸ்வரன்!

Tamil nila / Jun 7th 2024, 7:33 pm
image

பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக தலைமையேற்று பங்களிக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு  தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக வலுப்பெற்று பின்னர் இந்நிய இலங்கை ஒப்பந்தத்துடன் இலங்கை தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்தது. இருந்தும் துரதிஸ்டமாக வன்முறைகள் தொடர்ந்தகொண்டிருந்தது.

பின்னர் பன்னாட்டு சக்திகள் நாட்டின் உள் விவகாரங்களில் மத்தியஸ்தம் வகித்தும் பேரழிவுடன் வன்முறை அஸ்தமித்துப்போனது.

தமிழர்களுடைய அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வம் எட்டப்படவில்லை. ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆட்சிமுறையே மிஞ்சியது.

இருந்தும் காணி பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறப்பட்ட நிலையிலும் இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி.யினர்  தமிழர்கள் ஒரு நிலத் தொடர் அலகாக வாழ்வதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்க தாக்கல் செய்து பின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

அவ்வாறாக இருந்த சூழலில் ஜனநாயக முறைப்படி மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கமான முடிவின்றியே இருந்துவருகின்றது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது முறையாக பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டும்.

இலங்கை தொடர்பான அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு நலன்சார்ந்து இந்தியாவே இருந்து வருகின்றது. இருப்பினும் புரையோடிப்போயுள்ள தமிழர்களது அரசியல் தீர்வு விடயத்தில் 1983 இனக்கலவரம்முதல் இன்றைய பொருளாதார நெருக்கடி வரையும் இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலமாக இருந்தவருகின்றது.

அதே போன்று தற்போது பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முழுமையாக பங்காற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி- தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் - ரங்கேஸ்வரன் பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக தலைமையேற்று பங்களிக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக வலுப்பெற்று பின்னர் இந்நிய இலங்கை ஒப்பந்தத்துடன் இலங்கை தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்தது. இருந்தும் துரதிஸ்டமாக வன்முறைகள் தொடர்ந்தகொண்டிருந்தது.பின்னர் பன்னாட்டு சக்திகள் நாட்டின் உள் விவகாரங்களில் மத்தியஸ்தம் வகித்தும் பேரழிவுடன் வன்முறை அஸ்தமித்துப்போனது.தமிழர்களுடைய அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வம் எட்டப்படவில்லை. ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆட்சிமுறையே மிஞ்சியது.இருந்தும் காணி பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறப்பட்ட நிலையிலும் இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி.யினர்  தமிழர்கள் ஒரு நிலத் தொடர் அலகாக வாழ்வதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்க தாக்கல் செய்து பின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.அவ்வாறாக இருந்த சூழலில் ஜனநாயக முறைப்படி மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கமான முடிவின்றியே இருந்துவருகின்றது.இந்த சூழ்நிலையில் மூன்றாவது முறையாக பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டும்.இலங்கை தொடர்பான அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு நலன்சார்ந்து இந்தியாவே இருந்து வருகின்றது. இருப்பினும் புரையோடிப்போயுள்ள தமிழர்களது அரசியல் தீர்வு விடயத்தில் 1983 இனக்கலவரம்முதல் இன்றைய பொருளாதார நெருக்கடி வரையும் இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலமாக இருந்தவருகின்றது.அதே போன்று தற்போது பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முழுமையாக பங்காற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement