• Nov 23 2024

அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Tamil nila / Aug 26th 2024, 10:21 pm
image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement