• Nov 26 2024

மஸ்கெலியா புரவுன்லோ பகுதிக்கு கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு கோரிக்கை..!

Sharmi / Oct 4th 2024, 10:23 am
image

மஸ்கெலியா புரவுன்லோ 320 N பகுதிக்கு தனியாக ஒரு கிராம உத்தியோகத்தர் வேண்டுமென முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பல முறை முறைப்பாடு செய்து இருக்கின்றேன்.

இன்னும் சாத்தியமாக தெரியவில்லை. இதனால் புரவுன்லோ, கங்கேவத்தை, களனிவத்த, கிலன்டில், பிரேமா, குடா மஸ்கெலியா மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சுமார் 7000 மக்களுக்கு மேல் வாழும் புரவுன்லோ 320 N பிரிவுக்கு பகுதி நேர கிராம உத்தியோகத்தர் வழங்கிருப்பது பொறுத்தமானது இல்லை.

கிராம உத்தியோகத்தர் மஸ்கெலியா 320 A பிரதானமாகவும் புரவுன்லோ 320N பகுதி நேரமாக வியாழக் கிழமை மாத்திரம் கடமையில் ஈடுபடுகின்றார். 

கடந்த இரண்டு வருடங்களாக இந்த முறைபாட்டிணை மஸ்கெலியா பிரதேசசபையில் பிரேரணை மூலம் முன் வைத்துள்ளேன். 

அப்போது எனக்கு கொடுத்த பதில், உத்தியோகஸ்தர்கள் குறைவு புதிதாக நியமனம் வழங்கியவுடன் ஒருவரை தருகின்றோம் என்று.

புதிய நியமனம் வழங்கிய போதிலும் இன்னும் ஒரு கிராம உத்தியோகத்தர் ஒருவரை வழங்கவில்லை, இது தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகம் செயலாளரிடம் நியமனம் வழங்கும் முன் நேரில் சென்று முறையிட்டிருந்தேன்.

இன்றைய தினமும்(04) முறைபாடு வழங்கிருக்கின்றேன். இந்த விடயத்தில் கவனம் எடுப்பதாக தொலைபேசியில் உரையாடினார்.

வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புரவுன்லோ 320 N மக்கள் பாரிய போராட்டம் செய்து பெற்று கொள்ள தயாராக இருக்கின்றோம் எனவும் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா புரவுன்லோ பகுதிக்கு கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு கோரிக்கை. மஸ்கெலியா புரவுன்லோ 320 N பகுதிக்கு தனியாக ஒரு கிராம உத்தியோகத்தர் வேண்டுமென முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் பல முறை முறைப்பாடு செய்து இருக்கின்றேன்.இன்னும் சாத்தியமாக தெரியவில்லை. இதனால் புரவுன்லோ, கங்கேவத்தை, களனிவத்த, கிலன்டில், பிரேமா, குடா மஸ்கெலியா மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.சுமார் 7000 மக்களுக்கு மேல் வாழும் புரவுன்லோ 320 N பிரிவுக்கு பகுதி நேர கிராம உத்தியோகத்தர் வழங்கிருப்பது பொறுத்தமானது இல்லை.கிராம உத்தியோகத்தர் மஸ்கெலியா 320 A பிரதானமாகவும் புரவுன்லோ 320N பகுதி நேரமாக வியாழக் கிழமை மாத்திரம் கடமையில் ஈடுபடுகின்றார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த முறைபாட்டிணை மஸ்கெலியா பிரதேசசபையில் பிரேரணை மூலம் முன் வைத்துள்ளேன். அப்போது எனக்கு கொடுத்த பதில், உத்தியோகஸ்தர்கள் குறைவு புதிதாக நியமனம் வழங்கியவுடன் ஒருவரை தருகின்றோம் என்று.புதிய நியமனம் வழங்கிய போதிலும் இன்னும் ஒரு கிராம உத்தியோகத்தர் ஒருவரை வழங்கவில்லை, இது தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகம் செயலாளரிடம் நியமனம் வழங்கும் முன் நேரில் சென்று முறையிட்டிருந்தேன்.இன்றைய தினமும்(04) முறைபாடு வழங்கிருக்கின்றேன். இந்த விடயத்தில் கவனம் எடுப்பதாக தொலைபேசியில் உரையாடினார்.வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புரவுன்லோ 320 N மக்கள் பாரிய போராட்டம் செய்து பெற்று கொள்ள தயாராக இருக்கின்றோம் எனவும் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement