• Sep 28 2024

பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்ற ரிஷாத் வியூகம்..!

Sharmi / Sep 27th 2024, 12:14 pm
image

Advertisement

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிட்டு பத்திற்கும் கூடுதலான ஆசனங்களைப் பெறுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டின் நலன்களுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எமது கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் நேற்றிரவு(26) புத்தளத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு, பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்றோம்.

பொதுத் தேர்தலில் பல மாவட்டங்களில் எமது கட்சி போட்டியிடவுள்ள அதேவேளை, சில மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவும் தீர்மானித்துள்ளோம்.

எனவே, பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக போட்டியிடுவது பற்றி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்சியின் ஆதரவாளர்களோடும், முக்கியஸ்தர்களோடும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது சம்பந்தமாக புத்தளத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், புத்தளம் மாவட்டத்தில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு சம்பந்தமாக புத்தளத்தில் உள்ள மஸ்ஜித் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, பொது அமைப்புக்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் தெரியப்படுத்தவுள்ளோம்.

இந்தப் பொதுத் தேர்தலில் புத்தளத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு பலமான அணியாக நாம் செயற்படுவோம் என்றார்.

இதேவேளை, பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்து மயில் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்கள் கட்சித் தலைவரான ரிஷாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் , பொது சின்னத்தின் கீழ் ஏனைய கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக போட்டியிடுவதாக இருந்தால் மயில் சின்னத்தில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டணியாக போட்டியிடுமாறும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மயில் சின்னம் இல்லாமல், வேறொரு கட்சி ஒன்றின் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்தக் கூட்டணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமை இணைத்துக் கொள்ள கூடாது என்ற கோரிக்கையை கட்டாயமாக முன்வைக்க வேண்டும் என்றும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இதன்போது கூறியுள்ளனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவது சம்பந்தமாக பிரதான காட்சிகள் தமது கட்சி ஆதரவாளர்களோடும், முக்கியஸ்தர்களோடும் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஒரு பலமான கூட்டணியாக புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மைக் கட்சிகள் களமிறங்கியதைப் போல, இம்முறையும் சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றினைத்து ஒரு கூட்டணியாக களமிறக்குவதற்கு புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜய்இய்யதுல் உலமா மற்றும் புத்தளம் பெரிய பள்ளி என்பன மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்ற ரிஷாத் வியூகம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிட்டு பத்திற்கும் கூடுதலான ஆசனங்களைப் பெறுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.அதேவேளை நாட்டின் நலன்களுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எமது கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்தார்.பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் நேற்றிரவு(26) புத்தளத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு, பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்றோம்.பொதுத் தேர்தலில் பல மாவட்டங்களில் எமது கட்சி போட்டியிடவுள்ள அதேவேளை, சில மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவும் தீர்மானித்துள்ளோம்.எனவே, பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக போட்டியிடுவது பற்றி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்சியின் ஆதரவாளர்களோடும், முக்கியஸ்தர்களோடும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது சம்பந்தமாக புத்தளத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இதன்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், புத்தளம் மாவட்டத்தில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு சம்பந்தமாக புத்தளத்தில் உள்ள மஸ்ஜித் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, பொது அமைப்புக்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் தெரியப்படுத்தவுள்ளோம்.இந்தப் பொதுத் தேர்தலில் புத்தளத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு பலமான அணியாக நாம் செயற்படுவோம் என்றார்.இதேவேளை, பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்து மயில் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்கள் கட்சித் தலைவரான ரிஷாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும் , பொது சின்னத்தின் கீழ் ஏனைய கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக போட்டியிடுவதாக இருந்தால் மயில் சின்னத்தில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டணியாக போட்டியிடுமாறும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும், மயில் சின்னம் இல்லாமல், வேறொரு கட்சி ஒன்றின் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்தக் கூட்டணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமை இணைத்துக் கொள்ள கூடாது என்ற கோரிக்கையை கட்டாயமாக முன்வைக்க வேண்டும் என்றும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இதன்போது கூறியுள்ளனர்.நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவது சம்பந்தமாக பிரதான காட்சிகள் தமது கட்சி ஆதரவாளர்களோடும், முக்கியஸ்தர்களோடும் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஒரு பலமான கூட்டணியாக புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மைக் கட்சிகள் களமிறங்கியதைப் போல, இம்முறையும் சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றினைத்து ஒரு கூட்டணியாக களமிறக்குவதற்கு புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜய்இய்யதுல் உலமா மற்றும் புத்தளம் பெரிய பள்ளி என்பன மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement