வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் வீதி : வீதி அபிவிருத்தி திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஞா.கிஷோர் வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார்.