கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு 184 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக கமநல மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் பயிர் இழப்பீடு வழங்கும் பணி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு 114 மில்லியன் ரூபாய் பயிர் இழப்பீடும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் 3,272 விவசாயிகளுக்கு 70 மில்லியன் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள மாவட்டங்களுக்கான பயிர் இழப்பீடு வழங்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாக அந்த சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்க ஆரச்சி தெரிவித்துள்ளார்.
பயிர்ச்சேதங்களுக்கு 187 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கிவைப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு 184 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக கமநல மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.பொலன்னறுவை மாவட்டத்தில் பயிர் இழப்பீடு வழங்கும் பணி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு 114 மில்லியன் ரூபாய் பயிர் இழப்பீடும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் 3,272 விவசாயிகளுக்கு 70 மில்லியன் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மீதமுள்ள மாவட்டங்களுக்கான பயிர் இழப்பீடு வழங்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாக அந்த சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்க ஆரச்சி தெரிவித்துள்ளார்.