• Nov 26 2024

வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு..! அமைச்சர் டக்ளஸ்

Chithra / Jan 31st 2024, 1:20 pm
image

 

வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைமை உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது.

அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு கிடைத்த இந்த நிதி போதுமானதல்ல. ஆனாலும் வடமாகாண சபை நிதியும் பெரும் தொகையில் உள்ளது.

அத்துடன் அமைச்சுக்களுக்கு ஊடாக நிதிகள் ஒதுக்கப்படும். மேலதிகமாக நிதி வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார். அந்த நிதி கடல் தொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்  என அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு. அமைச்சர் டக்ளஸ்  வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைமை உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது.அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு கிடைத்த இந்த நிதி போதுமானதல்ல. ஆனாலும் வடமாகாண சபை நிதியும் பெரும் தொகையில் உள்ளது.அத்துடன் அமைச்சுக்களுக்கு ஊடாக நிதிகள் ஒதுக்கப்படும். மேலதிகமாக நிதி வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.மேலும், கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார். அந்த நிதி கடல் தொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்  என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement