• May 19 2024

மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட 64 ஆயிரத்தை ஏப்பம் விட்டு ‘முட்டை’ நாடகமாடிய அதிபர்..! samugammedia

Chithra / Oct 24th 2023, 2:35 pm
image

Advertisement



நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட  பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலையத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேச தோட்டப் பகுதியில் இயங்கும் பாடசாலையில் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ருபாய் அடிப்படையில் 64,000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது.

பணம் வசூல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் களவாடப்பட்டதாக  மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். அதனை மூடி மறைப்பதற்கே முட்டையை வைத்து நாடகமாடுகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைமையினால் குறித்த பாடசாலையில் இன்று இடம் பெறவிருந்த  விஜயதசமி பூஜைக்கான ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்றுள்ளன.

விஜயதசமி பூஜையினை நடத்துமாறு மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்த போது பாடசாலையின் அதிபர் பூசாரி ஒருவரிடம் சென்று முட்டை ஒன்றை மந்திரித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சத்தியம் பெற்றுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி அமைச்சினால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தின் படி பாடசாலைகளில் இடம் பெறுகின்ற நிகழ்வுகளுக்கு எந்த ஒரு மாணவனிடம் இருந்தும் பணம் அறவிட முடியாது.  

அதிபரிடம் கையளிக்கப்பட்ட 64,000ம் ருபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு ஆசிரியர்கள் சிலர் கோருகின்ற போதும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்வதற்கு அந்த அதிபர் தயக்கம் காட்டி வருகின்றார் என அறியமுடிகின்றது.


மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட 64 ஆயிரத்தை ஏப்பம் விட்டு ‘முட்டை’ நாடகமாடிய அதிபர். samugammedia நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட  பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலையத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேச தோட்டப் பகுதியில் இயங்கும் பாடசாலையில் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ருபாய் அடிப்படையில் 64,000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது.பணம் வசூல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் களவாடப்பட்டதாக  மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். அதனை மூடி மறைப்பதற்கே முட்டையை வைத்து நாடகமாடுகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர்.இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைமையினால் குறித்த பாடசாலையில் இன்று இடம் பெறவிருந்த  விஜயதசமி பூஜைக்கான ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்றுள்ளன.விஜயதசமி பூஜையினை நடத்துமாறு மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்த போது பாடசாலையின் அதிபர் பூசாரி ஒருவரிடம் சென்று முட்டை ஒன்றை மந்திரித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சத்தியம் பெற்றுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.கல்வி அமைச்சினால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தின் படி பாடசாலைகளில் இடம் பெறுகின்ற நிகழ்வுகளுக்கு எந்த ஒரு மாணவனிடம் இருந்தும் பணம் அறவிட முடியாது.  அதிபரிடம் கையளிக்கப்பட்ட 64,000ம் ருபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு ஆசிரியர்கள் சிலர் கோருகின்ற போதும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்வதற்கு அந்த அதிபர் தயக்கம் காட்டி வருகின்றார் என அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement