• May 18 2024

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி: ரஷ்ய பெண் உளவாளி கைது! samugammedia

Tamil nila / Aug 8th 2023, 6:53 am
image

Advertisement

உக்ரைன் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையி்ட்டார்.சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை வேவு பார்த்தது மட்டுமின்றி, அவர் மீது தாக்குதல் நடத்திடவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த பெண், உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.

மேலும் தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி: ரஷ்ய பெண் உளவாளி கைது samugammedia உக்ரைன் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையி்ட்டார்.சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து விசாரித்தனர்.இதில் அவர் ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை வேவு பார்த்தது மட்டுமின்றி, அவர் மீது தாக்குதல் நடத்திடவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த பெண், உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.மேலும் தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement