• May 19 2024

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க நடவடிக்கை!

Chithra / Dec 1st 2022, 12:27 pm
image

Advertisement

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது.

இதன்படி சைட்டம் (SAITM) என்ற தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடியும் என்று இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர்.

கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அங்குப் பயிலும் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த கல்லூரியை மீள ஆரம்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து இது தொடர்பில் கலந்துரையாட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சையை தாய்மொழியில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில், கருத்துரைத்த அவர், அனுமதிப்பரீட்சையை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்பதை, பிரதம நீதியரசரும் சட்டத்தரணிகள் சங்கமும் தீர்மானித்துள்ளன.

இதனை அரசாங்கத்தால் மாற்ற முடியாது. எனினும் சட்டக்கல்லூரியில் ஆங்கில பாடத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, இதற்காக அரசாங்கமும், நிதி வழங்கலை செய்யமுடியும் என்று தெரிவித்தார்.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க நடவடிக்கை தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது.இதன்படி சைட்டம் (SAITM) என்ற தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடியும் என்று இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர்.கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அங்குப் பயிலும் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.இந்த கல்லூரியை மீள ஆரம்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து இது தொடர்பில் கலந்துரையாட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இதேவேளை சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சையை தாய்மொழியில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில், கருத்துரைத்த அவர், அனுமதிப்பரீட்சையை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்பதை, பிரதம நீதியரசரும் சட்டத்தரணிகள் சங்கமும் தீர்மானித்துள்ளன.இதனை அரசாங்கத்தால் மாற்ற முடியாது. எனினும் சட்டக்கல்லூரியில் ஆங்கில பாடத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, இதற்காக அரசாங்கமும், நிதி வழங்கலை செய்யமுடியும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement