சதொசவின் பிளாஸ்டிக் போத்தல் மீள்சுழற்சி முயற்சிக்கு சஜித் பாராட்டு!

61

நாடளாவிய ரீதியில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பிளாஸ்டிக் போத்தல்களை மீள் சுழற்சி செய்யும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் முயற்சியை எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார்.

சதொச விற்பனை நிலையங்களில் ரூ.35 விலையுடைய இந்தப் புதிய தண்ணீர் போத்தல்கள், விற்பனை நிலையங்களுக்குத் திரும்பும் போது ஒவ்வொரு போத்தலுக்கும் ரூ.10 திருப்பிச் செலுத்தப்படும்.

நுகர்வோர் குறைந்த விலையில் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்து சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதே எமது நோக்கமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்தும் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இது பெரும் முயற்சியாக அமையும்.

பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்தும் அனைத்து உற்பத்தியாளர்களிடமும் இதை அமுல்படுத்த முடியும் என நம்புவதாகவும், பிளாஸ்டிக் சேகரிப்பானது மீள்சுழற்சி செய்வதை மிகவும் எளிதாக்கும் என்றும் சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார்.

கடவுளால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! ஜயசுந்தர அனுப்பிய சர்ச்சைக்குரிய செய்தி