• May 04 2024

சஜித் கேள்வி கேட்க முடியாது..! சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு samugammedia

Chithra / Jul 5th 2023, 1:56 pm
image

Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் அரச அதிகாரிகளை அழைத்து எந்தவொரு விடயம் குறித்தும் தெளிவுபடுத்த முடியும், ஆனால் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05.07.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

ஜூன் 30ஆம் திகதி உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பொது நிதிக் குழுவின் (COPF) கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்கட்சி தலைவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது பொருத்தமில்லாத விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த  எதிர்கட்சி தலைவர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு EPF மற்றும் ETF மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால் தான் நடைமுறையில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை அறிய நான் விரும்பினேன்.

அதிகாரிகளை விசாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்தான் முக்கியமான தகவல் கிடைத்திருக்கும். 

எனவே இனிமேல் அனைத்து அரசு அதிகாரிகளையும் வரவழைப்பேன். அவர்கள் வரவில்லை என்றால் எனது சிறப்புரிமைகள் மீறப்படும். 

எனவே, எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டால் சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்

சஜித் கேள்வி கேட்க முடியாது. சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு samugammedia எதிர்க்கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் அரச அதிகாரிகளை அழைத்து எந்தவொரு விடயம் குறித்தும் தெளிவுபடுத்த முடியும், ஆனால் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (05.07.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.ஜூன் 30ஆம் திகதி உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பொது நிதிக் குழுவின் (COPF) கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்கட்சி தலைவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.இது பொருத்தமில்லாத விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.அதற்கு பதிலளித்த  எதிர்கட்சி தலைவர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு EPF மற்றும் ETF மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால் தான் நடைமுறையில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை அறிய நான் விரும்பினேன்.அதிகாரிகளை விசாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்தான் முக்கியமான தகவல் கிடைத்திருக்கும். எனவே இனிமேல் அனைத்து அரசு அதிகாரிகளையும் வரவழைப்பேன். அவர்கள் வரவில்லை என்றால் எனது சிறப்புரிமைகள் மீறப்படும். எனவே, எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டால் சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்

Advertisement

Advertisement

Advertisement