• May 17 2024

திருமலை வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை கையளித்த சஜித்!

Sharmi / Dec 22nd 2022, 4:05 pm
image

Advertisement

எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)" வேலைத்திட்டத்தின் மூலம்  வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கும் தொடர் பயணத்தின் 55வது நிகழ்வாக திருகோமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகுரூபின் வேண்டுகோளின் பேரில் , திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ரூபா 39 இலட்சம் பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் (Dialysis Machine) சஜித் பிரேமதாச அவர்களினால் வைத்தியசாலை பணிப்பாளர் Dr. ஜகத் விக்ரமசிங்க அவர்களிடம் இன்று வியாழக்கிழமை காலை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கலான திரு. கபில கழுபஹன, திரு. சரத் லொரென்ஸுஹேவா, திரு. திருக்குமார், மாவட்ட முகாமையாளர்கள் ஜனாப்.A.S.M. மஹரூப். திரு. பிரான்சிஸ் அந்தோணி சேகர், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் கெளரவ A.L.M. நெளபர், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாத்திஹ் கஸ்ஸாலி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள்  ஆகியோருடன் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



திருமலை வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை கையளித்த சஜித் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)" வேலைத்திட்டத்தின் மூலம்  வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கும் தொடர் பயணத்தின் 55வது நிகழ்வாக திருகோமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகுரூபின் வேண்டுகோளின் பேரில் , திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ரூபா 39 இலட்சம் பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் (Dialysis Machine) சஜித் பிரேமதாச அவர்களினால் வைத்தியசாலை பணிப்பாளர் Dr. ஜகத் விக்ரமசிங்க அவர்களிடம் இன்று வியாழக்கிழமை காலை வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கலான திரு. கபில கழுபஹன, திரு. சரத் லொரென்ஸுஹேவா, திரு. திருக்குமார், மாவட்ட முகாமையாளர்கள் ஜனாப்.A.S.M. மஹரூப். திரு. பிரான்சிஸ் அந்தோணி சேகர், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் கெளரவ A.L.M. நெளபர், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாத்திஹ் கஸ்ஸாலி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள்  ஆகியோருடன் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement