• May 25 2025

உப்பு பற்றாக்குறை முடிவுக்கு; இந்தியாவிலிருந்து தொடரும் இறக்குமதி!

Chithra / May 25th 2025, 10:07 am
image

  

உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பினை அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை முதல் குறித்த உப்பு இறக்குமதி நாட்டை வந்தடைந்த வண்ணம் உள்ளதாக, அதன் தலைவர் கயான் வெல்லாலதெரிவித்தார். 

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்குத் தேசிய உப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, குறித்த உப்பு தொகுதியைச் சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம், உப்பு பற்றாக்குறை முடிவுக்கு வரும் என்றும், அதிகரித்துள்ள உப்பின் விலை குறைவடையும் என்றும், தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், லங்கா உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து மேலும் 10,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. 

இந்த மாத இறுதிக்குள் அந்த உப்பு இறக்குமதி நாட்டை வந்தடையும் என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலக தெரிவித்தார்.


உப்பு பற்றாக்குறை முடிவுக்கு; இந்தியாவிலிருந்து தொடரும் இறக்குமதி   உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பினை அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் குறித்த உப்பு இறக்குமதி நாட்டை வந்தடைந்த வண்ணம் உள்ளதாக, அதன் தலைவர் கயான் வெல்லாலதெரிவித்தார். நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்குத் தேசிய உப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த உப்பு தொகுதியைச் சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம், உப்பு பற்றாக்குறை முடிவுக்கு வரும் என்றும், அதிகரித்துள்ள உப்பின் விலை குறைவடையும் என்றும், தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், லங்கா உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து மேலும் 10,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அந்த உப்பு இறக்குமதி நாட்டை வந்தடையும் என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement