• May 18 2024

முடிவின்றி தொடரும் சாமிமலை தேயிலை தூள் விவகாரம்!

Sharmi / Dec 1st 2022, 12:10 pm
image

Advertisement

சாமிமலை பகுதியில் உள்ள ஹோரண பிலான்டேசனுக்கு உரித்தான நான்கு தேயிலை தொழிற்சாலையில் இருந்து தேயிலை தூள் ஏற்ற முடியாத வண்ணம் தொழிலாளர்கள் தடுத்து வைத்து உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கோரிக்கைக்கு இணங்க தொழிலாளர்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது எனவும் தொழிலாளர்களின் சகல விதமான பிரச்சினைகள் முறையாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.

நேற்று மாலை அங்கு உள்ள தோட்டங்களில் உள்ள தேயிலை பொதிகளை ஏற்றிச் செல்ல பார ஊர்திகள் வந்த போதும் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தூள் ஏற்ற இடமளிக்க வில்லை.
இதனால் தோட்ட நிர்வாகம் இன்று காலை 10 மணிக்கு பின்னர் தோட்ட தொழிலாளர்களை பணி செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கவரவில்லை தோட்டத்தில் விவசாய காணிகளை கைப்பற்ற தோட்ட நிர்வாகம் முன் வந்தமைக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதுடன் இனியும் அவ்வாறான செயலில் தோட்ட நிர்வாகம் மேற்கொள்ள கூடாது . அத்துடன் கடந்த வாரம் தேயிலை தொழிற்சாலை பணிக்கு சென்ற தொழிலாளி தேயிலை தொழிற்சாலை பணியில் ஈடுபட்டு வேலையில் அதி சக்தி வாய்ந்த மின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கன்டி போதனா வைத்தியசாலையில் அதி சிகிச்சை பிரிவில் கடும் ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் அவரது நிலைமை கவலை கிடமாக உள்ளது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் நாளாந்த தோட்ட பணி இடம் பெற்று வருகின்றன.

தேயிலை கொழுந்து பறித்தல் மற்றும் தேயிலை தூள் அரைத்தல் ஏனைய தோட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என அத் தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

முடிவின்றி தொடரும் சாமிமலை தேயிலை தூள் விவகாரம் சாமிமலை பகுதியில் உள்ள ஹோரண பிலான்டேசனுக்கு உரித்தான நான்கு தேயிலை தொழிற்சாலையில் இருந்து தேயிலை தூள் ஏற்ற முடியாத வண்ணம் தொழிலாளர்கள் தடுத்து வைத்து உள்ளனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கோரிக்கைக்கு இணங்க தொழிலாளர்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது எனவும் தொழிலாளர்களின் சகல விதமான பிரச்சினைகள் முறையாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.நேற்று மாலை அங்கு உள்ள தோட்டங்களில் உள்ள தேயிலை பொதிகளை ஏற்றிச் செல்ல பார ஊர்திகள் வந்த போதும் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தூள் ஏற்ற இடமளிக்க வில்லை.இதனால் தோட்ட நிர்வாகம் இன்று காலை 10 மணிக்கு பின்னர் தோட்ட தொழிலாளர்களை பணி செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் கவரவில்லை தோட்டத்தில் விவசாய காணிகளை கைப்பற்ற தோட்ட நிர்வாகம் முன் வந்தமைக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதுடன் இனியும் அவ்வாறான செயலில் தோட்ட நிர்வாகம் மேற்கொள்ள கூடாது . அத்துடன் கடந்த வாரம் தேயிலை தொழிற்சாலை பணிக்கு சென்ற தொழிலாளி தேயிலை தொழிற்சாலை பணியில் ஈடுபட்டு வேலையில் அதி சக்தி வாய்ந்த மின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கன்டி போதனா வைத்தியசாலையில் அதி சிகிச்சை பிரிவில் கடும் ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் அவரது நிலைமை கவலை கிடமாக உள்ளது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.மேலும் நாளாந்த தோட்ட பணி இடம் பெற்று வருகின்றன.தேயிலை கொழுந்து பறித்தல் மற்றும் தேயிலை தூள் அரைத்தல் ஏனைய தோட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என அத் தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement