சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் திருமலை மாவட்ட அமைப்பாளருக்குமிடையிலான சந்திப்பு இன்று பி.ப நடைபெற்றது.
இதன் போது குறித்த கட்சியினால் கட்சியின் பெயரால் சில உதவிகளை வழங்க விரும்புவதாகக் கோரியிருந்தனர்.
அதற்கமைய பதிலளித்த ஏற்பாட்டுக்குழு எமது துயிலுமில்லத்தைச் சாட்டி கட்சிகள் நிதி சேகரிப்பு மற்றும் தமது அரசியல் தேவைகளுக்காக மாவீரர் துயிலுமில்லங்களைச் சாட்டி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தல் போன்றவை நடைபெறுவதனால் நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை வழங்கும் போது நிதி வழங்குபவரின் தனிப்பட்ட பெயரில் வழங்குமாறும் கட்சிகளின் பெயரில் வழங்கும் உதவிகள் தேவையில்லை எனவும் மறுதலித்து நிராகரித்துள்ளதாக சம்பூர் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார்.
இம்முறை நினைவேந்தலானது மாவீரர் பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் மட்டுமே நடைபெறும் என்பதனையும் ஏற்பாட்டுக்குழு அவர்களுக்குத் தெளிவாக வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சி ரீதியான உதவிகளை நிராகரித்தது சம்பூர் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் திருமலை மாவட்ட அமைப்பாளருக்குமிடையிலான சந்திப்பு இன்று பி.ப நடைபெற்றது.இதன் போது குறித்த கட்சியினால் கட்சியின் பெயரால் சில உதவிகளை வழங்க விரும்புவதாகக் கோரியிருந்தனர்.அதற்கமைய பதிலளித்த ஏற்பாட்டுக்குழு எமது துயிலுமில்லத்தைச் சாட்டி கட்சிகள் நிதி சேகரிப்பு மற்றும் தமது அரசியல் தேவைகளுக்காக மாவீரர் துயிலுமில்லங்களைச் சாட்டி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தல் போன்றவை நடைபெறுவதனால் நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை வழங்கும் போது நிதி வழங்குபவரின் தனிப்பட்ட பெயரில் வழங்குமாறும் கட்சிகளின் பெயரில் வழங்கும் உதவிகள் தேவையில்லை எனவும் மறுதலித்து நிராகரித்துள்ளதாக சம்பூர் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார்.இம்முறை நினைவேந்தலானது மாவீரர் பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் மட்டுமே நடைபெறும் என்பதனையும் ஏற்பாட்டுக்குழு அவர்களுக்குத் தெளிவாக வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.