• May 18 2024

நண்பர்களுடன் கடலில் நீராடச்சென்ற 17 வயது மாணவனுக்கு நேர்ந்த துயரம் samugammedia

Chithra / Apr 14th 2023, 2:43 pm
image

Advertisement

நீராடச் சென்றிருந்த வேளையில், நேற்று (13) பிற்பகல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (14) அக்குரலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவனான எச்.பி.சஞ்சன என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே வயதுடைய மேலும் இரு மாணவர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், மூவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த மாணவனை காப்பாற்ற முடியாமல் கடலில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனதாகவும், மீட்கப்பட்ட இரு மாணவர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு விடுமுறை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக வீடுகளுக்கு தெரிவித்துவிட்டு இந்த மூன்று மாணவர்களும் கடலில் குளிக்கச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நண்பர்களுடன் கடலில் நீராடச்சென்ற 17 வயது மாணவனுக்கு நேர்ந்த துயரம் samugammedia நீராடச் சென்றிருந்த வேளையில், நேற்று (13) பிற்பகல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (14) அக்குரலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவனான எச்.பி.சஞ்சன என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதே வயதுடைய மேலும் இரு மாணவர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், மூவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.உயிரிழந்த மாணவனை காப்பாற்ற முடியாமல் கடலில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனதாகவும், மீட்கப்பட்ட இரு மாணவர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புத்தாண்டு விடுமுறை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக வீடுகளுக்கு தெரிவித்துவிட்டு இந்த மூன்று மாணவர்களும் கடலில் குளிக்கச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement