சரத் பொன்சேகாவின் மூஞ்சையில் அறைந்த கஜேந்திரகுமாரின் பேச்சு!

410

ஸ்ரீறிலங்கா நாடாளுமன்றில் இன்று நடந்த அமர்வின்போது பெரும்பான்மையின உறுப்பினர்களின் கடும் கூச்சலின் மத்தியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றியிருந்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா குறுக்கிட்டு கஜேந்திரகுமாரின் கருத்துக்களை மறுதலிக்கும் முயர்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருப்பினும் கஜேந்திரகுமார் தனது கருத்துக்களைத் தொடர்ந்தும் முன்னிறுத்திக்கொண்டிருந்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய கஜேந்திரகுமார்,

“முப்பது வருடகால போரினால் முற்றாக அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு முற்றாக அழிக்கப்பட்டு வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் வடக்கு கிழக்கில் கொடுமையான பொருளாதார தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது. பொருளாதார தடையினால் வடக்கு கிழக்கில் ஒரு லீற்ற பெற்றோலின் விலை ஏறத்தாழ 1500 ரூபா வரை சென்றிருந்தது. அதனால், வடக்கு கிழக்கின் பொருளாதரத்தின் மிக உக்கிய கூறுகளான மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்ய முடியாத அளவுக்கு இந்த பொருளாதார தடை மூலம் முடக்கப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் மக்களுக்கு அனுமதியற்ற பிரதேசங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. உதாரணமாக இங்கே இபோது இருக்கின்ற சரத்பொன்சேக யாழ் மாவட்டத்தளபதியாக இருந்த காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தின் ஏறத்தாழ 30 வீதமான பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இராணுவம் தனது கட்டுப்பாடின் கீழ் ஆக்கிரமித்து வைத்திருந்தது.” என்றார்.

இதன்போது சரத் பொன்சேகா மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார், அதற்கு உங்களது பதில் ஒன்றும் இங்கு தேவையில்லை, இது எனக்குரிய நேரம், நான் சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக உட்காரவும் என கஜேந்திரகுமார் கூறி அவரது குறுக்கீட்டை மீறி தன் உரையை தொடர்ந்தார்.