• Dec 01 2022

கிண்ணியாவில் உணவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்!

Tamil nila / 2 months ago
image

பொருளாதார நெருக்கடியினால் நாள் ஒன்றுக்கு உணவை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் 45 ஆவது நாளை முன்னிட்டு இன்று (25) விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வானது இன்று காலை 11மணிக்கு கிண்ணியா குட்டிக்கராச்சி சந்தியில்  இடம் பெற்றது.
கிண்ணியா இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் உணவளிக்கும் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பலர் பெற்றுக் கொண்டனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி,உலமா சபையின் பிரதிநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏழை மக்களுக்கு மற்றவர்களும் உதவ வேண்டும். என்ற நோக்கத்தில் கிண்ணியா குட்டிக்கராச்சி சந்தியில் இருந்து கொழும்பு திருகோணமலை பிரதான வீதியூடாக சென்று மீண்டும் உணவளிக்கும் இடத்தை வந்தடைந்தது. இதில் ஒரு நாள் உணவை பெற்றுக் கொள்ள முடியாத பலர் அரிசி,உருளைக் கிழங்கு,பெரியவெங்காயம், தேங்காய் முதலானவற்றை பிரதேச செயலாளர் மற்றும் ஏற்பாட்டாளர்களிடமிருந்து மக்கள் பெற்றுக் கொண்டனர்.

பிற செய்திகள்