கதிர்காமம் விகாரையை சுற்றி பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்தக் குழந்தைகள் கதிர்காமம், கிரிவெஹெர ஆகிய விகாரைகளில் தனியாகவோ அல்லது பெற்றோருடன் சேர்ந்தோ பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், மீதியுள்ள பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த குழந்தைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் பிச்சை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கதிர்காமம் பொலிஸார் இக்குழந்தைகளை பொலிஸ் காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதிலும் பெற்றோர்கள் அவர்களை விடுவித்து மீண்டும் அதே வேலையில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் பாடசாலை செல்லும் வயதில் யாசகம் பெறும் சிறுவர்கள். கதிர்காமம் விகாரையை சுற்றி பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த இந்தக் குழந்தைகள் கதிர்காமம், கிரிவெஹெர ஆகிய விகாரைகளில் தனியாகவோ அல்லது பெற்றோருடன் சேர்ந்தோ பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது.மேலும் சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், மீதியுள்ள பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த குழந்தைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் பிச்சை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் கதிர்காமம் பொலிஸார் இக்குழந்தைகளை பொலிஸ் காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதிலும் பெற்றோர்கள் அவர்களை விடுவித்து மீண்டும் அதே வேலையில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.