• May 19 2024

பாடசாலைகளில் கட்டணம் அறிவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை! வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Nov 22nd 2023, 8:52 am
image

Advertisement

ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களால் பாடசாலை நேரத்துக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் கட்டணம் அறிவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால இதனை  தெரிவித்தார்.

இன்று முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படாமல், கட்டணம் அறவிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் முறைப்பாடளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.

பாடசாலைகளில் கட்டணம் அறிவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களால் பாடசாலை நேரத்துக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் கட்டணம் அறிவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால இதனை  தெரிவித்தார்.இன்று முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படாமல், கட்டணம் அறவிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் முறைப்பாடளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதற்கமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement