• Sep 17 2024

மைத்திரியின் வீட்டில் நடந்த இரகசிய பேச்சுவார்த்தை- 30 எம்.பிக்கள் பங்கேற்பு! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 6:28 pm
image

Advertisement

அனுர யாப்பா-நிமல் லன்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் பல்வேறு அரசியல் கட்சிகளை அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக புதிய அரசியல் கூட்டணியின் ராஜகிரிய அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படியான விசேட பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் ஒரு நாள் இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய அரசியல் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சுமார் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றதுடன் புதிய அரசியல் கூட்டணியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்பட்டு வரும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதன் காரணமாக இந்த சந்திப்பை இரகசியமாக நடத்தவும் அங்கு பேசப்பட்ட விடயங்களை வெளியில் கூறுவதில்லை என இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தேவையான முக்கியமான சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுனவின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனைகள் இன்றி புதிய அரசியல் கூட்டணி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மைத்திரியின் வீட்டில் நடந்த இரகசிய பேச்சுவார்த்தை- 30 எம்.பிக்கள் பங்கேற்பு samugammedia அனுர யாப்பா-நிமல் லன்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் பல்வேறு அரசியல் கட்சிகளை அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக புதிய அரசியல் கூட்டணியின் ராஜகிரிய அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்படியான விசேட பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் ஒரு நாள் இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய அரசியல் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சுமார் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.இந்த பேச்சுவார்த்தை மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றதுடன் புதிய அரசியல் கூட்டணியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்பட்டு வரும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.இதன் காரணமாக இந்த சந்திப்பை இரகசியமாக நடத்தவும் அங்கு பேசப்பட்ட விடயங்களை வெளியில் கூறுவதில்லை என இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.தேவையான முக்கியமான சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுனவின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனைகள் இன்றி புதிய அரசியல் கூட்டணி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement