• Oct 31 2024

தீபாவளியை முன்னிட்டு இலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

Chithra / Oct 30th 2024, 8:07 am
image

Advertisement

 

நாளையதினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபரால், சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.


தீபாவளியை முன்னிட்டு இலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை  நாளையதினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர்.அத்துடன் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபரால், சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement