• Oct 02 2024

யாழில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் தேர்தல் குறித்தான கருத்தமர்வு..!

Sharmi / Oct 1st 2024, 3:16 pm
image

Advertisement

இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மத்தியஸ்த செயற்பாடுகள், தெளிவூட்டல் கருத்தரங்குகள், பரிந்துரை ரீதியான செயற்பாடுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவினை கட்டியெழுப்புவதற்காக அத்திவாரமாக செயற்பாடுகள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றது.

அதேவேளை, இலங்கையின் ஆட்சிமுறையில் பல்வகைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் பரிந்துரைத்தும் வருகின்றது.

அந்தவகையில், இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது Active Citizens for Elections and Democracy (ACED) எனும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் தொடச்சியாக மேற்குறிப்பிடப்பட்ட கருப்பொருளிலான பயிற்சியானது யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றையதினம்(01) நடைபெற்றது.

இலங்கை தேசிய சமாதான பேரவையினர், சொண்ட் நிறுவனத்தின் பணியாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

யாழில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் தேர்தல் குறித்தான கருத்தமர்வு. இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மத்தியஸ்த செயற்பாடுகள், தெளிவூட்டல் கருத்தரங்குகள், பரிந்துரை ரீதியான செயற்பாடுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவினை கட்டியெழுப்புவதற்காக அத்திவாரமாக செயற்பாடுகள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றது.அதேவேளை, இலங்கையின் ஆட்சிமுறையில் பல்வகைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் பரிந்துரைத்தும் வருகின்றது.அந்தவகையில், இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது Active Citizens for Elections and Democracy (ACED) எனும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் தொடச்சியாக மேற்குறிப்பிடப்பட்ட கருப்பொருளிலான பயிற்சியானது யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றையதினம்(01) நடைபெற்றது.இலங்கை தேசிய சமாதான பேரவையினர், சொண்ட் நிறுவனத்தின் பணியாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement