• Nov 25 2024

சீரற்ற காலநிலை - மரம் முறிந்து வீழ்ந்ததில் 7 வீடுகள் முற்றாகச் சேதம் -இருவர் காயம்!

Tamil nila / Nov 13th 2024, 9:55 pm
image

இரத்தினபுரி - காவத்தை, நீலகாமம் பகுதியில் நெடுங்குடியிருப்பு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். 

 குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த நெடுங்குடியிருப்பில் உள்ள 7 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (14) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடனான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 அத்துடன் சில பகுதிகளில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 



சீரற்ற காலநிலை - மரம் முறிந்து வீழ்ந்ததில் 7 வீடுகள் முற்றாகச் சேதம் -இருவர் காயம் இரத்தினபுரி - காவத்தை, நீலகாமம் பகுதியில் நெடுங்குடியிருப்பு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.  குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த நெடுங்குடியிருப்பில் உள்ள 7 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (14) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடனான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அத்துடன் சில பகுதிகளில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement